Tuesday, August 4, 2015

கனிந்த நல் கலாம்.




கலாமும் காலமும்
இடம் மாறிய இணை எழுத்துக்களே;
எழுத்துக்கள்  இடம் மாறினும்
கலாமும் காலமு மொன்றே .
காலத்தைக் கணக்கிட்டேச் சென்றன
கலாமின் காலடிச் சுவடுகள்.
காலத்தை வென்றவர் காலத்தின் கருவெனில்,
காலமாவாரோ கலாம்?
இயற்கையோடு இணைந்தவர்
இயற்கை எய்துவரோ என்றேனும் ?      
விண்ணில் கலாம் ஓர் ஏவுகணை;
மண்ணில் ஏவல் அறியாக் கனி.
மழலை தொடங்கி முதுமை வரை
மனித மனம், இனிமை போற்றும் கனி;
கணிதமும் கணினியும் அறிந்த கனி.
உண்மை உணர்ந்த, உயர்ந்த கனி
மென்மையும் மெருகூட்டும் மேன்மையும்,
தன்மையாய் கொண்ட தனிச்சுவைக்  கனி.       
உரத்த சிந்தனையால் ஊக்கம் உரைத்த கனி.
பிறப்பால்  தமிழும் பிறர்க்காக ஆங்கிலமும்
சிறப்பாய்  நவின்ற கனி.
இறப்பறியாச் சிந்தனையில், என்றும்
இணையில்லா பாரதம் வென்ற கனி .
                                        ப.சந்திரசேகரன்.  


No comments:

Post a Comment