வெட்கப்படு!
வேலியே பயிரை மேய்கையில்,
மூலையில் நின்று நீ வெட்கப்படு.
வெட்கப்படு!
வேலெடுத்து வீரம் போற்றிய மண்ணில்,
கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் கண்டு நீ
வெட்கப்படு.!
போலிகள் பலர்கூடி போதனை செய்கை யில்,
காலங்கள் தோறும் கற்றசுய அறிவிழக்க நீ
வெட்கப்படு!.
நீ ஏற்ற மனிதமும் நீ போற்றும் மொழிகளும்,
கூர் மழுங்க சூளுரைக்கும் சூதறிந்து நீ,
வெட்கப்படு!.
நிறம் மாறா குணத்தோடு நீ கண்ட நீதி நெறி,
புறங்கூறும் சிறியோர்தம் அகமறிந்து நீ
வெட்கப்படு!.
சாதி மதமென்று சரடுகள் திரிப்போரை பார்த்து நீ,
வெட்கப்படு!.
நல்லது நினைக்கையில் நல்லது நடக்கு மென்று நீ,
நெஞ்சுநிமிர்த்தி நேர்வழிநடக்கையில்,
அல்லவையில் திளைக்கும் அறவழி
அற்றோரின் அழிநிலை கண்டு நீ,
வெட்கப்படு.!
ப.சந்திரசேகரன்.