Friday, May 26, 2023

அட்டைக் கத்திகளும் ஆகாசப்புளுகுகளும்

புதிய கட்டிடமொன்று

பரணியில் பழைய ஓலைகளை

பரபரப்பாய்த் தேடுகிறது.

பிட்டுக் கதைகளை இட்டுக் கட்டி

அட்டைக் கத்திகளின்

ஆகாசப் புளுகுகளை

ஆளுக்கொரு வாயில்

அவசர அவசரமாய்த் திணிக்கிறது.

பாரம்பரியப் பெருமை கொண்ட

பழைய கட்டிடத்தின் 

ஊருணி உறைந்திருக்க

பாராளுமன்றம் இங்கே

'பார்' ஆளும் மன்றமென

அசைபோடும் வாய்கள்

பொய்ப்பசைத் தடவி 

புதுச்செய்தி அனுப்புகிறது.

சங்குகள் பலமுழங்க

செங்கோல் வருகையிலே,

எந்தமடம் எடுத்துவர,

எனும்குழப்பக் குரல்களில்

சரித்திரச் சான்றுகளும்

சாசன நடைமுறையும்

சமூகக் கடமைகளும்

சரிவைக் காணுகின்றன.

பிரம்மாண்டப் புதுமையில்

வரலாற்றின் பிரம்மாண்டம்

வாய்க்கரிசி தேடுகிறது.

ப.சந்திரசேகரன்.








Monday, May 15, 2023

Oh,the Seasons !

Spring strikes us with pollen;

Summer shoots up blisters;

Autumn shakes the bottom;

Winter chills each one's breath.


Politics has its own seasons.

It springs a surge of surprises.

With hand in hand as comrades,

People fight together,to win elections.


Once they win,they raise the heat

Like Summer,boiling for positions; 

Those who happily shook hands before,

Begin to shake,each other's base and space, 


Rivals wreck them by raising the rift

To cause a shift of power in their favour.

Backstabs chill and choke the breath,

Like brutal winter breaking the neck.


But 'seasoned' leaders win the game of power,

As they bravely fought all seasons,hour to hour.

P.Chandrasekaran 




Monday, May 8, 2023

கதிரவனுக்கு ஏது காலாவதி?

 "கிழக்கு வெளுத்ததடி 

கீழ்வானம் சிவந்ததடி

கதிரவன் வரவு கண்டு 

கமல முகம் மலர்ந்ததடி" 

  எனும் 'அவன் பித்தனா'திரைப்பட பாடல் வரிகள்  சிலநேரம் என் நினைவுக்கு வருகையில்,இங்கே ஒரு தாமரை கட்சி, உதயசூரியன் கட்சியைக்  கண்டு சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறதே என்ற நகைப்புச் சிந்தனையும் கூடவே வரும்.

  உதய சூரியனின் வெப்பம் கூடக்கூட,அதன் முகம் கண்டு மலர்ந்த தாமரைக்கு,சங்கடம் கூடுகிறது.இதில் பிரச்சனை,கதிரவனின் வெப்பத்தில் இல்லை; குளம் ஒன்றே பெரி தென நினைக்கும் தாமரை,நீர் மட்டுமே வாழ்க்கையில்லை,நெருப்பும் நிறைந்ததே வாழ்க்கை எனும் மாற்று நிலைப்பாட்டினை ஒப்புக்கொள்ள மறுப்பதே,நாட்டின் பல பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது.

   வானம்,காற்று,நீர்,நெருப்பு,அத்தனையும் புவியின் யதார்த்தங்கள்.இதில் நீரில் மலரும் தாமரை,நீர் மட்டுமே பிரதானம்,இதர அனைத்தமே தனக்குக் கீழ் என்று கருதம் பாணியில்,சிலர் தங்களதுசித்தாந்தம் மட்டுமே முதன்மை என்றும்,மற்றவைக்கு இங்கே இடமில்லை என்றும் கெடுவழிக் கொள்கை பரப்புகையில், கண்ணதாசனின் 'கறுப்புப்பணம்'திரைப் படத்தின், 

"இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் 

சிலர்,கிணற்றில் இருந்துகொண்டே உலகளப்பார்"

எனும் ஒப்பற்ற வரிகளில் உண்மையைக் காணமுடிகிறது. 

    இதுபோன்ற மடமை மன நிலையில் ஊறிப் போனவர்கள்,எதிர் தரப்பு இயக்கத் தின் கொள்கையும் கோட்பாடும்,காலாவதி யானதாக நினைப்பதும் பேசுவதும்,குறுகிய மனப்போக்கல்லாது வேறு என்னவாக இருக்கமுடியும்?.    

   இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பு,மொழிவாரி மாநிலங்களின் கூட்டாட்சித் தத்துவத்தில் அடங்கியிருக் கையில்,'ஒரே நாடு,ஒரே கட்சி,ஒரே தேர்தல் ஒரே மொழி,ஒரே மதம்'எனும் முழக்கங் களில்,முதலாவதைத்தவிர மற்ற அனைத்துமே பிரிவினை வாதத்தின் முகக்கவசங்களாகின்றன!முகக்கவசம், நோய்க்கு எதிரானதாக இருக்கவேண்டுமே யன்றி,நோயின் காரணியாக இருக்கக் கூடாது.

   கூட்டாட்சி நடைமுறையில் இயங்கும் ஒவ்வொரு மாடலுக்கும்,அந்த மாநிலத்தை ஆள்வதற்கென மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட ஆளும் கட்சியே தனக்கு உகந்த மாடலை உருவாக்குகின்றது.அந்தவகை யில் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசு,பெருமையுடன் உருவாக்கிய மாடலே திராவிட மாடல். 

   சுயமரியாதையை யாரிடமும் அடகு வைக்காத,கொள்கையினை மாற்றுக் கொள்கைக்கு விட்டுக்கொடுக்காத, சமத்துவம் பேணலை தார்மீகக் கடமை யாகக் கொண்டுள்ள,ஒரு மாடல் எப்படி காலாவதியாகமுடியும்? திராவிடத்தின் பெயரால் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக தேர்ந்தடுக்கப்பட்ட எவரும், அவர் ஒரு முதல்வராகவோ  அல்லது அமைச்சராகவோ இருக்கும் பட்சத்தில், அடிமை சாசனம் எழுதிக்கொடுப்பாரே யானால் அவர்கள் மக்களின் நம்பிக்கை துரோகிகள் ஆகின்றனர்.

  அப்படிப்பட்ட இழிச்செயலை பதவிக்காக ஒரு சிலர் முன்பு செய்திருந்தால்,அதனை எல்லோரும் செய்யவேண்டும் என எதிர் பார்ப்பதும்,அதற்கென ரகசியமான சாணக்கிய தந்திரங்களை மேற்கொள்வ தும்,அடிமைச்சங்கிலியின் ஆர்ப்பாட்டமே!எப்பொழுதெல்லாம் ஜனநாயகம் சர்வாதி காரத்தை முன்னிறுத்தி சமத்துவத்திற்கு சவக்குழி தோன்றுகிறதோ,அப்போதெல் லாம் ஜனநாயகம்,தனக்கான சாவு மணி யையும் அடித்துக்கொள்கிறது 

   கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் நாட்டை ஆளும்,திராவிட முன்னைற்றக் கழகத்தின் அரசாளும் நடை முறைகள், சமூக நலனை அட்டவணையாக்கி, நாகரீகமான செயல்பாடுகளால் அதனை சாதனைகளாக்கி,பலரால் பாராட்டும் வண்ணம் பலம் பெற்றிருக்கின்றன. மதவாதமும் சந்தர்பவாதமும் இல்லாத பலரின் கூட்டணிக்குரல்கள் ஒலித்திட, கடந்த ஆட்சியின் சில அழுக்குச்சுவடுகள் அழிக்கப் பட்டு வருகின்றன.

   மகளிர் மற்றும் மாணவியர் நலன் பேணல், பள்ளிச்சிறார் காலைச் சிற்றுண்டி,'நான் முதல்வன்'சிந்தனைக் கிளர்ச்சி,மக்களைத் தேடி மருத்துவம்,கல்வி,மற்றும் தொழில் முன்னேற்றம்,கட்டமைப்பு விரிவாக்கம், என்று எல்லாவகையிலும் அமைதியும் பொறுப் புணர்வும் நிரம்பப் பெற்ற அரசாக,திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.எந்த அளவு உச்ச பட்ச உழைப்பை மாநிலத்திற்கு அளிக்க முடியோ அந்த வகையில் மக்கள் குறைகளைத் தேடிச் செல்லும் முதல்வராய் இன்றைய தமிழ் நாட்டு முதல்வர்,கடமை யாற்றிக்கொண்டி ருக்கிறார்.இந்த உண்மை நிலையினை  உணராதோர்,இன்று தமிழ் நாட்டில் மிகக் குறைவே.

   ஆர்ப்பாட்டமில்லாமல் ஆட்சி நகர்கையில் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசின் முக்கிய தீர்மானங்கள் பலவும், கொள்கைகளால் முரண்பட்ட, அதிகார பலம் மிக்கவர் என்று கருதும் ஒரு சில தனி நபர் களால் கிடப்பில் போடப்பட்டு,மக்களாட்சி நடை முறைகள் பின்னுக்கு தள்ளப்படு கின்றன. இதோடு நில்லாமல்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை மாடல்,காலாவதியாகிவிட்டது என்று கூறுவது,ஆளும் அரசை மட்டுமல்லாது, அந்த அரசை தேர்ந்தெடுத்த மக்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தி, காயப்படுத்துகிறது.

 இந்த அறைவேக்காட்டு அறைகூவல்களை திராவிடம் + மாடல் என்று இரண்டாகப் பிரித்து " 'காலாவதி' என்று சொன்னவர், மாடலைத்தான் சொன்னார்;திராவிடத்தை அல்ல"என்று சில வலதுசாரி விமர்சகர்கள் விளக்கம் கூறுவது,மேலும் நகைச்சுவையா கிறது. திராவிடம் இல்லாமல் எங்கிருந்து வந்ததாம் அதன் மாடல்?.இது போன்ற சித்து விளையாட்டுக்கள் வலதுசாரிகளுக்கு மட்டுமே கை வந்த கலை.

   அத்துமீறி சீண்டப்படுகையில்,அமைதி கூட பன்மடங்கு சீற்றம் பெற்று,நாட்டின் பன் முகத் தன்மையிலும் கூட்டாட்சி கோட்பாடு களிலும் ஊறிப்போன சமத்துவ,சமதர்ம, சுயமரியாதை ஊற்றுகளை,பேரலைகளாகி, சர்வாதிகார சூழ்ச்சிகளை கரைத்து காலாவதி ஆக்கிவிடும் என்பதே,வரலாறு புகட்டும் பாடம்.

  காலம் வென்ற, திராவிடம் எனும் இயக்கம், 'மாடல்'எனும் சொல்லை மட்டுமே இன்று தத்தெடுத்திருக்கிறது.ஆனால் திராவிடம் என்பது ஒரு இனமல்ல. அது மனித சமூகத் தின் சமத்துவ கூட்டமைப்பு.அதற்கு மதமோ சாதியோ இல்லை.அதற்கு ஒட்டு மொத்த மனிதமே,மனித முன்னேற்றமே இலக்கு. இந்த இலக்கிற்கு காலவரையரையில்லை. இந்த இலக்கு ஒருபோதும் காலாவதியாகப் போவதுமில்லை.

ப.சந்திரசேகரன்.

   

Sunday, May 7, 2023

Ease the Past

When the past badly pricks the present 

The present sadly suffers for the past.

If memory stays as the muck of the mind,

The smelly past stinks through the  present.


The fragrance of the past is just a fable.

But fables delight the mind more than facts.

Each memory of past facts needs a Covid test,

To stall the past,as a pandemic of the present.


Forgetting is an easier word to say than to skip.

Without forgetting no one can forgive the past.

The characters that hurt our minds turn monsters

Tearing the peace of our mind into invisible pieces.


The winnable way to find traces of peace for now,

Is to draw a few stop overs of the past for a parade.

Pick out a few pleasant notes of events from memory,

To  reconcile with the past,for a mind- easing cover story.

P.Chandrasekaran

 

Wednesday, April 26, 2023

தொழிலும் தெய்வமும்

(உழைப்போர் உயரட்டும்.)

≈=====≈======≈======≈=====≈

செய்யும் தொழிலே தெய்வம் என்றால்,

தொழுதிடும் தெய்வம் தொழிலென் றாகுமோ?

பெய்திடும் மழையே பெரிதொரு தொழிலாய்,

பூமியில் பசுமைப் புரட்சிகள் விதைக்கும்.

கொய்திடும் நிலத்தில் கூறுகள் அமைத்து,

கூடுதல் பசுமை,படைப்பதே தொழிலாம்.

'மெய்வருத்தக் கூலி'முயற்சிகள் தருமோ?

மேதினப் புகழ்ச்சி போக்குமோ அயர்ச்சி?


உழைக்கும் நேரம் உருப்படி ஆக்கலும்,

உருப்படி உழைப்பு,ஊதியம் பெறுதலும்,

வழக்குகள் இல்லா வரையறை கணக்கில்,

நெருப்பினில் நீரை இறைப்பது போலாம்.

விழித்திரை காணும் வெளிப்படை விதிகள்,

பெருக்குமே உழைப்பு,ஆற்றல் போற்றலில்.

ப.சந்திரசேகரன். 

Saturday, April 22, 2023

அமரர்,பேராசிரியர் திரு.மூ.பொன்னம்பலம் அவர்களின் நினைவுத் துளிகள்.

 


    ஜூலை இரண்டு,1970;விரிவுரையாளர் நியனமத்திற்கான நேர்க்காணல்; பொன்மலையிலிருந்து புத்தனாம்பட்டிக்கு வழி அறியாமல் துறையூர் சுற்றி தாமதமாக சென்றடைகிறேன்.உள்ளே அழைக்கிறார் முதல்வர்.சான்றிதழ்கள் பரிசோதனை! பின்னர் ஓரிரண்டு கேள்விகள்."The appointment of lecturer was over this morning itself.One Mr.R.Jenardhanam was appointed" என்கிறார்."Thank you Sir" எனக்கூறி நான் இருக்கையிலிருந்து எழுகிறேன்."No.No Please sit down.There is one vacancy for tutorship.I will make it as Lecturer and appoint you" என்று கூறி தனது அலுவலக உதவி யாளர் திரு.நடேச பிள்ளையை  அழைத்து, கல்லூரி அலுவலக மேலாளர் [பின்னர் அலுவலக கண்காணிப்பாளர் என்று மாற்றப்பட்டது }திரு N.துரைராஜனை வரச்சொல்கிறார்.அவரிடம் நியமன ஆணை தயாரிக்கச் சொல்லி எனக்கு வழங்குகிறார்.

  ஓருசில நிமிடங்களில்,ஒரே பார்வையில் நடந்து முடிந்தது,எனது விவிவுரையாளர் பதவி நியமனம். அந்த சில நிமிடங்களில்  அவர் மன ஓட்டம் என்னவாகியிருக்கும் என்பதை அவரே அறிவார்.அதே ஆண்டு என்னை கல்லூரி மாணவர் விடுதியின் மாணவர் ஒழுங்கு நிலை பராமரிப்பவர் களில் (Proctors) ஒரு வராக நியமித்து கல்லூரி விடுதியில் தங்கச் சொல்கிறார். அவ்வப்போது அவர் விடுதிக்கு வரும்போது உடல் ஆரோக்கியம் பேணுமாறும்,இரவில் பால் அருந்துமாறும் கூறிச்செல்வார்.

   அந்தஆண்டு கல்லூரி மாணவர் மன்ற திறப்புவிழா கூட்டத்திற்கு ஒரு சிறப்பு விருந்தினரை ஏற்பாடு செய்யுமாறு என்னை திருச்சிக்கு அனுப்புகிறார்.நானும், உறுமு தனலட்சுமி கல்லூரியின் அன்றைய முதல்வரும் எனது ஆசிரியருமான பேராசிரியர் திரு சி.எஸ் கமலபதி அவர்களை அழைக்க,அவர் மறுத்துவிட, பிறகு திரு.பொன்னம்பலம் அவர்களின் அனுமதியை தொலைபேசியில் பெற்று, அதே நாள்,பெரியார்  ஈ.வே.ரா கல்லூரியின் அன்றைய முதல்வர் திரு ஆளுடையா பிள்ளை அவர்களிடம் வேண்டுகோள் விடுக்க அவரும் ஒப்புக்கொள்கிறார்.  

   அந்த கல்வி ஆண்டு இறுதியில் ஒருநாள், கல்லணைக்கு சுற்றுலா செல்கிறோம். அங்கு மதிய உணவு முடிந்த பிறகு யாரோ ஒருவர் நான் நன்றாகப் பாடுவேன் எனக்கூற,சுமாராகக்கூவும் என்னை பாடச்சொல்கிறார்.நானும் அந்த ஆண்டு வெளிவந்த 'எங்கிருந்தோ வந்தாள்' திரைப்படத்தில் டி.எம்.எஸ் பாடிய,"ஒரே பாடல் உன்னை அழைக்கும்"என்ற பாடலைப் பாடுகிறேன் .பாடலை தன் தொடையில் தாளம்தட்டி ரசித்து,என்னை வெகுவாகப் பாராட்டுகிறார்   

  அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று குறைகிறது.என்னை அழைத்து வேறு கல்லூரியில் வேலை தேடச் சொல்கிறார். ஆனால் அதிஷ்டவசமாக,எனது சீனியர் திரு ஆர் ஜெனார்த்தனம் அரசு கல்லூரியில் சேர,என்னை அழைத்து மகிழ்ச்சியுடன்'God is great' எனச் சொல்லி இரண்டாம் ஆண்டு நியமன ஆணை வழங்குகிறார்.

  எனது திருமணத்திற்கு தம்பதி சமேதிரராய் வந்து வாழ்த்தி,பிறகு  துறையூருக்கு அருகே ஒரு கிராமத்தில் நடந்த ஒரு திருமண  நிகழ்ச்சியில் நாங்கள் சந்திக்கையில்,எனது எட்டுமாத ஆண் குழந்தையை கையில் வாங்கி,சில மணித்துளிகள் தூக்கிவைத்து,"எங்கள் கிரீன் கார்டனுக்கு இதுபோல் ஒரு குழந்தை எங்களுக்கு  பேரனாய் வேண்டும்" என்கிறார்.

   காலம் செல்ல செல்ல ஆசிரியர் சங்க போராட்டக்களமும் எதிர் வினைச் செயல் பாடுகளும்,எங்களுக்கிடையே,(வேறு பல ஆசிரியர்களுக்கும் நடந்தது போல) பாலம் தகர்த்து ஒரு கனத்த இடைவெளியை தோற்றுவித்தன.இருப்பினும்,ஒரு நீண்ட போராட்ட காலம் முடிந்து,இழந்த வேலை நாட்களை ஈடு செய்வது குறித்து நானும் பேராசிரியர் திரு.வி.கிருஷ்ணகுமாரும் முதல்வர்,பேராசிரியர் திரு பொன்னம்பலம் அவர்களை அவரது அலுவலகஅறையில் சந்திக்கையில்,"நீண்ட கால வேலையை குறுகிய காலத்தில் முடிப்பது,பேராசிரியர் சந்திரசேகரன் போன்றோரால் முடியாது. அவர் மாணவர்கள் ஒருபகுதியை புரிந்துகொண்டால் மட்டுமே அடுத்த பகுதிக்குச் செல்வார்"என்று கூறிட என் நெஞ்சம் நெகிழ்ந்தது.

  எத்தனை எதிர்த்தும் என் பணியாற்றல் மீது  இத்தனை வலுவான  மதிப்பீடா? அவரை எதிர்த்து போராடும் ஒவ்வொவொரு காலக்கட்டத்திலும் மலையென மனபலம் கொண்ட ஒருவரிடம் மோதுகிறோமே,விளைவு என்னவாக இருக்கும் என்றொரு அச்சமும், நெஞ்சுரம் நிரம்பப்பெற்ற ஒரு நபருடன் தான் மோதுகிறோம் என்னும் பெருமிதமும், எனக்குமட்டுமல்லாது என்னைப்போல் அவரை எதிர்த்து நின்ற ஒவ்வொரு ஆசியிரருக்கும்,அலுவலருக்கும் இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.

   பணியிலிருந்து ஓய்வு பெரும் நாளன்று என் மகனுடன் சென்று நான் அவரை சந்திக்கிறேன்."Take your father to the US.Take care of him"என்று என் மகனிடம் கூறுகிறார்.ஓய்வூதியம் பெறத்தொடங்கிய பின்னர்,ஒரு சில ஆண்டுகள் அவருக்கு கடிதமும் புத்தாண்டு வாழ்த்துக்களும்  அனுப்பியிருக்கிறேன்.ஓய்வுபெற்ற சில நாட்களில் ஓமாந்தூரில் அருக்கு மிகவும் நெருங்கிய உறவினர் இல்லத்தில் ஒரு பெரிய காரியத்தில் அவரை சந்திக்கையில்,'ஓய்வுபெற்ற பின்னரும் வந்திருக்கிறீர்களே'' என்று நெகிழ்ந்தார்.

    ஒரு சில ஆண்டுகள் கழித்து எனது நண்பர் முனைவர் திரு டி. பாலசுப்ரமணியத்தின் மூத்த மகள் திருமணத்தில் திரு.பொன்னம்பலம் அவர்களுடன் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அவர் அடிக்கடி என் கனவில் வருவதை குறிப் பிட்டேன்.சிரித்தார்.வயது ஆகிவிட்டதால் எனது கடிதங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும்,தன் கைப்பட கடிதம் எழுத இயலாமைக்கு வருந்தினார். 

  இதற்கிடையே கல்லூரி நிறுவனத்தந்தை பெருமைமிகு மூக்கப்பிள்ளை அவர்களின் வாழ்கைப்புத்தகத்தை,அமெரிக்காவில் வாழும் முனைவர்  தங்கவேலு  என்பவர் எழுத இருப்பதாகவும்,அதற்கு என்னை ஆங்கில மொழியூட்டம் செய்து தருமாறும் பணித்தார்.ஆறுமாதத்திற்குமேல் திரு. தங்கவேலு அவர்களுடன் இணைந்து உருவாக்கிய அந்த நூல்,அமெரிக்க பதிப்பக விதிகள் உள்ளடக்கிய பிரச்சனைகள் காரணமாக வெளிவரவில்லை என்று அறிய நேர்ந்தது. 

   இறுதியாக நான் திரு.பொன்னம்பலம் அவர்களை சந்தித்தது,அவரது எண்பதாம் பிறந்த நாள் முடிந்து ஒரு சில மாதங்களில் அவரது இல்லத்தில்!."தீர்க்காயுசா இருங்க" என்று வாழ்த்தினார்.அவருடன் மிகவும் நெருங்கி பின்னர் விலகி நின்ற ஒரு சில ஆசிரிய நண்பர்களில் நானும் ஒருவன். ஆனால்,எங்களுக்கிடையே  ஏதோ  ஒரு இனம்புரியா ஆழ்ந்த உணர்வுப்பாலம் இருந்ததாகவே நான் அவ்வப்போது நினைத்திருக்கிறேன்.அவர் என்னைப் பற்றி என்ன வெல்லாம் நினைத்திருப் பாரோ!ஆழ் கடலல்லவா,அவர் மனம்!. இப்போது பலரின் நினைவுக்கதவுகளை தட்டி எழுப்பி,அவர் உறங்கிக்கொண்டிருக் கிறார்.

 ஓம் ஷாந்தி! ஆமென்!ஹே அல்லாஹ்!புத்தம் சரணம் கச்சாமி! தம்மம் சரணம் கச்சாமி;சங்கம் சரணம் கச்சாமி!         

ப.சந்திரசேகரன்.     

Friday, April 14, 2023

ஒழுக்கத்தின் மறுபக்கம் சனாதனமா?

 

   என்னுடைய பன்னிரெண்டு வயதில் ஒருமுறை,எனது தந்தையாருடன் ரயிலில் பயணம் செய்கையில், அவருடைய நண்பரும்,அந்த நண்பரின் என்னைக் காட்டிலும் இளைய மகனும், உடனிருந் தனர்.ஒரு ரயில் நிலையத்தில் தாகம் என்று கூறிய எனக்கு ஒரு குளிர்பான பாட்டில் வாங்கித்தந்து,அதை அச்சிறுவனுடனும்  பகிரச்சொன்னார் என் தந்தை.நான் தாகத்தில் அப்பானத்தை முழுமையாகக் குடித்துவிட,அதைக்கண்ட என் தகப்பனார் அச்சிறுவனுக்கு வேறொ ரு பாட்டில் குளிர் பானம் வாங்கிக் கொடுத்து,என்னிடம், மற்றவருடன் பகிர்ந்துண்ணும் பழக்கத்தின் முக்கியத் துவத்தை உணர்த்தி,என்னை கடிந்து கொண்டார்.     

    பின்னர்,எனது பதினான்கு வயதில் நாங்கள் வசித்த ரயில்வே காலனி ஓட்டு வீட்டின் விட்டதில் காணப்பட்ட,சிட்டுக் குருவியின் கூட்டினை நான் கலைக்கப் போக,"டேய் அத ஏண்டா கலைச்சே? ஒரு உயிரினத்தை வதை பண்றியே!"எனக்  கூறி 'சொட்டேல்' என்று செவிட்டில் அறைந்தார் என் தந்தை.இவை இரண்டுமே என் வாழ்க்கைப்பாதையின் ஒழுக்கப்பாடங் களாக அமைந்தன. இவ்விரண்டு ஒழுக்க மூட்டும் அனுபவங் களில் சனாதனம் இருந்ததோ இல்லை யோ,அது என் தந்தைக்கும் தெரியாது; எனக்கும் தெரியாது.அது பற்றி எனக்கு கவலையும் இல்லை.

   இந்த விரிந்த விசாலமான உலகத்தில் எத்தனை நிறம் கொண்ட மனிதர்கள் ! உலகின் எல்லா நாடுகளிலும் ஒழுக்கம் நிறைந்தோர் உண்டு.மதமும் மொழியும் வேறுபட்ட மனிதரிடையே,ஒழுக்கம் என்பது உள்ளத்தில் உள்ளூறி,உணர்வு களையும் சிந்தனையையும் திரட்டி வைத்து,சொற் களால்,செயல்களால்,ஒரு மனிதர் எப்படிப் பட்டவர் என்பதை அடையாளம் காட்டுகிறது. பழக்கவழக் கங்களும் கற்ற கல்வியும் சேர்ந்து,சாதி மதங்களுக்கப்பாற்பட்டு, நல்லதையும் தீயதையும் பிரித்துப் பார்க்கச் செய்வதே, வாழ்வியலாகும்.நல்லவர்கள் நெஞ்சில் குடியேறும் இறைவன் எனும் மன மகிமை, கருவறையையும்,தன் மூல இருக்கை யையும் கடந்து,நல்லவர்களுடன் சங்கமித்து,நன்மையின் ஒளியாகிறது. அந்த ஒளிக்கு சாதி,மத,மொழியில்லை. அது ஒரு பளிச்சிடும் பரவசம். நன்மை யின் மேடையில் நர்த்தனமாடி மெய் சிலிர்க்கச் செய்வதே இறைவன் எனும் உணர்வின் இயல்பு.

   என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவருக்கும் எனக்குமிடையே,எனது ஒரு சிறிய வீட்டு மனைக்கான விற்பனை ஒப்பந்தம்,வாக்கு ரீதியாக நடைபெற்று, நான் அவரிடம்,எங்கள் இருவருக்கும் இசைந்த,அந்த மனைக்கான தொகை யினை கடந்த நூற்றாண்டு எண்பது களில் பெற்றுக்கொள்கி றேன்.அதை அவர் தொண்ணூறுகளில் இன்னொரு வருக்கு எட்டு மடங்கு விலைக்கு கிரயம் செய்கி றார்.நான் சார் பதிவாளர் அலுவலகம்  சென்று,அந்த விற்பனை ஆவணத்தில் கையெழுத்திடுகிறேன். அவர் அந்த கிரய வித்தியாசத் தொகை யில் ஐந்து விழுக் காட்டினை, என்னுடன் பகிர்கிறார்.அவர் என்மீது வைத்திருந்த மித மிஞ்சிய நம்பிக்கைக்கும்,அந்த நம்பிக்கை கெடாமல் பார்த்துக்கொண்ட எனக்குமிடையே நிலவிய ஒழுக்கக் கதிர்வீச்சின் அளவு கோல் என்ன?அதை கற்றுத்தந்தது சனாதனமா?அது பற்றி எனக்குத் தெரி யாது.தெரியவேண்டிய அவசியமுமில்லை. இதிலும் அந்த நண்பர்,ஒரு இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனது சொந்த அனுபவங்களில் மூன்றை மட்டுமே  இங்கே குறிப்பிட்டேன். இன்னும் பல இருக்கக்கூடும்.இதுபோல் ஒவ்வொரு வர் வாழ்விலும் வேரூன்றிய அனுபவங்கள் வாழ்க்கை எனும் இலக் கியத்தில்,கவிதை களாய்,சிறு கதைக ளாய்,புதினங்களாய், கட்டுரைகளாய், நாடகங்களாய்,தினப்பக் கங்களை உள்ளடக்கி காப்பியங்கள் படைப்பதை, சம்பந்தப்பட்டோர் அறிவர். ஒழுக்கத்திற்கு சாதியில்லை;மதமில்லை. அவரவர் மனதின் அழுக்குகளை சுத்தம் செய்யும் நேரத்தில்,ஒவ்வொரு மனிதரும் சூத்திரரே.

   வயிற்றுப் பசிபோக்கும் உணவும்,மானம் காக்கும் உடையும்,மூளையினை மூலைக் குள் முடங்கச்செய்யா கல்வியும், எல்லோ ர்க்கும் கிடைக்கச் செய்வதில், மதத்தி னைக் கடந்து முந்தி நின்று, அரசாளும் ஆற்றலே, மனிதம் தழைக்கச் செய்யும். நன்னூல், ஆத்திச்சூடி கொன்றை வேந்தன், திருக்குறள்,நாலடியார் மற்றும் பல நெறியியல் நூல்கள் நிரம்பிய வற்றா நதி யாம்,தமிழ் மொழி!.வாழ்க்கையின் வரம்பினுள் ஒழுக்கம் ஒரு வீச்சு;அல்லது உரைகல்.அதற்கு ஒவ்வொரு மனிதரின் உள்ளமே ஊற்று.

  மண்ணில் வாழும் ஒவ்வொரு மனிதரும் யாரோ ஒருவரால், அல்லது சிலரால் ஈர்க்கப்படுகின்றனர். இப்படி ஈர்க்கப்பட்ட பலரும் வேறொரு நபரையோ,அல்லது சிலரையோ,ஈர்க்கின்றனர்.இந்த ஈர்ப்பே, ஈர்ப்பவரின் குணம் அனுசரித்து, நன்மை தீமையாகிறது. ஈர்ப்புக்குள் அடங்கிய பலரும் வார்ப்புகளாகி,சமூகம் என்றாகின் றனர்.அவர்கள் மேடையேறி சனாதனப் பாடமோ, வேறு மதப்பாடங்களோ நடத்துவ தில்லை.அப்படி நடத்தினால் மட்டுமே, ஒழுக்கம் என்பது உயரப்போவதுமில்லை. அன்றாட காலக் கடலில் மனிதர்கள் நல்லவர்களாய், தீயவர்களாய் கரைகின் றனர்.நல்லொழுக்கம் பேணுவோர்க்கு, 

ஒழுக்கம் விழுப்பந்  தரலான் 

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் 

  எனும் வள்ளுவர் வாக்கு,அவர்கள் அறிந்தும் அறியாமலும்,அவர்களை வழி நடத்துகிறது எனும் கருத்தியலையும் மறுப்பதற்கில்லை.

ப.சந்திரசேகரன்.