பறப்பவை எல்லாம் பறவைக ளல்ல ;
பறவைகள் அனைத்தும் பறப்பதது மில்லை.
விண்ணில் பறக்கும் விமான மெல்லாம்,
கானமயிலாட கண்ட வான் கோழியாம்.
ஏழை மனிதரின் எண்ணங்க ளெல்லாம்,
பறக்க நினைக்கையில் சிறகுகள் முறியும்.
கவிஞரின் கற்பனை விண்ணையே விரிக்கும்.
அறிஞரின் சிறகுகள் ஆழ்கிண றறியும்.
இளைஞர்தம் சிறகுகள் ஈட்டியாய்ப் பறந்து.
காதலில் வீரத்தில் காவியம் படைக்கும்.
பட்டங்கள் பறந்திட,திட்டங்கள் திணறும்.
எட்டிப் பிடிக்கா ஆசைகள் இளைத்து,
கூரையில் பறக்கும் கோழிக ளாகும்.
பணத்துக்கு பறக்கும் படைக ளனைத்தும்,
குணங்கள் இழந்து கோட்டைகள் கட்டும்.
மானம் பறந்திட மரபுகள் மடிந்து,
ஊனம் ஊன்றிய உளச்சிற குடையும்.
பறந்து பதுங்கும் குழிகளில் பந்தினை,
விரைந்து பறந்து மீட்டிடும் கரங்கள்,
இறப்பில் பறக்கும் மூச்சினை மீட்குமோ?
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment