27/09/2025
நாற்பத்தொருபேர் நரபலியின்,
--------------------------------------------------
முதலாண்டு நினைவஞ்சலி
------------------------------------------------
கார்மேகங்கள் கரைந்தால்,
மண்ணில் மழைத்துளிகள்!
மேகமூட்டம் முட்டிக்கொள்ள,
தாகம் தீர்ந்து மண் மயங்கும்.
நெரிசலின் நரபலியில்
முட்டிடும் உடல்கள்,
மூச்சிரைக்க,கூச்சலிடும்.
ரசனையெல்லாம் ரணமாக,
மரணங்கள் மண்ணில் விழும்.
ஒன்றா,இரண்டா, எடுத்துச்சொல்ல!.
கன்றும், பசுவும், காளையும்,
காலை முதல் மாலைவரை,
காத்திருந்து காத்திருந்து,
திரண்டவராய் தீர்ந்தவராய்,
சாலையில் சாய்ந்து வீழ்ந்து,
சரமாரி சாவுரைத்து,
ஓலமிட்டு ஓலமிட்டு,
கருவறுத்து போனவூர்,கரூர்!.
கரூரை கரியாக்க,
காரணம் யார்? கூறுவர் யார்?
திரண்டவரோ,கடந்தவரோ?
நடந்தவற்றை கண்டவரோ?
பதவியும் உதவியும்,
படியேறி சான்றுரைக்க,
ஆண்டொன்று சென்றது;
மாண்டவர்க்கு நீதியோ
இன்றுவரை தெளிவின்றி,
மறைவினில் நின்றது!.
பயிர்களும்,உயிர்களும்
உயர்த்திடும் கரங்களின்றி
துயரினில் துடித்திட.
பயிற்சிகள் பழகுதலே,
பரமபத அரசியலாம்.
ப. சந்திரசேகரன்.
🥺
ReplyDelete🙏🙏
ReplyDelete