Thursday, September 24, 2026

சம்பந்தம்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம்

உண்டெனில்,

கண்ணுக்கும் காட்சிக்கும் சம்பந்தம் உண்டு.

பெண்ணுக்கும் தாய்மைக்கும் பெருமை

உண்டெனில்,

எண்ணுக்கும் எழுத்துக்கும் ஏற்றம் உண்டு.

உண்மைக்கும் உரிமைக்கும் உடன்பாடு

உண்டெனில்,

அண்மைக்கும் அன்புக்கும் அருங்கதை உண்டு.

திண்மைக்கும் திறமைக்கும் தகைமை

உண்டெனில்,

திண்ணை பேச்சுக்கும் தெளிவாற்றல் உண்டு.


பன்மையில் ஒருமையும் பதுங்குதல்

உண்டெனில்,

நன்மையில் நல்லோர் நாற்புறமும் உண்டு.

இன்மையிலும் இன்பம் இடம்பெறுதல்

உண்டெனில்,

முன்பயின்ற அனுபவங்கள், முத்தாகி

ஞானமுறும். 

தன்வழியும் பிறர்வழியும், நம்வழிகள் என்றாகின், 

பின்வரும் தலைமுறைகள் நம்வழியில்

நலம்பெறும்.!

ப. சந்திரசேகரன். 

1 comment:

  1. ".....இன்மையிலும் இன்பம் இடம்பெறுதல் உண்டெனில்,
    முன்பயின்ற அனுபவங்கள், முத்தாகி ஞானமுறும்....." முத்தான வார்த்தைகள்; சத்தான கருத்து!

    ReplyDelete