Sunday, March 7, 2021

Awaiting a True Salute

  


                                          { Picture Courtesy:- Pinterest}


      {Anthem on the Women's Day}

"A Rose is a Rose because we call it a rose"

A woman is a woman because we call her so!

What more in store for her,than her dusty bound

That keeps her days and nights,on a rigid round.


Being stalked,shelved,stained and stigmatized

Between the dungeon of a home and the dingy world,

She is a'beauty and joy for ever',for the stalking wolves

Who make her days and nights,dancing in her nerves.   


Either as a piece of garment in varied wardrobes,

Or as a mobile toy on stage,parading for a profit,

Or in the attic,as an old stuff unfit anymore,for use.

The'adore woman'slogan often becomes her noose.  


When can she retrieve herself from many a cliched tribute,

And walk away as she wills,without abuse,for a true salute?

P.Chandrasekaran.



Thursday, March 4, 2021

ச்சும்மா அதிருமில்ல!

 

   "சிந்தனை செய் மனமே 

    செய்தால்,தீவினை அகன்றிடுமே"ன்னு 

  ஒரு அருமையான பாட்ட, நம்மள்ல பலபேர் கேட்டு ரசிச்சிருப்போம். சிந்தனையோட சிறப்புக்கெல்லாம்,சிரசே மூலதனம்.அதுனாலதான் 'எண்ஜான் ஒடம்புக்கு சிரசே பிரதானம்'னு,சொல்றோமோ என்னவோ 

   எல்லாரும் சுயமா சிந்திக்கணும்னு சொன்ன ஒரே காரணத்துக்காக, கிரேக்க நாட்டைச் சேர்ந்த தத்துவ மேதை சாக்ரடீஸ்,விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார்னு வரலாறு சொல்லுது.

   மந்தையில இருக்கிற ஆடுங்க மாதிரி யாருமே சிந்திக்காமலோ, இல்ல  கடிவாளத்தை கட்டிவிட்ட குதிரைங்க மாதிரி ஒரேகோணத்தில சிந்திக்கவோ,ஆரம்பிச்சோம்னா,  மனுஷனுக்கும் மிருகத்துக்கும் வித்யாசமில்லன் னும்,அதுக்கு மொத மொதல்ல ஒவ்வொருத்தரும், அவங்கவங்கள ஒழுங்கா புரிஞ்சுக் கணும்னுதான் சாக்ரடீஸ் சொல்ல வந்தாரு. ஆனா அதுக்குள்ள அவுரு கதையே முடிஞ்சு போச்சு.  

    நாம எல்லாருமே சிந்திக்கிறோம்இங்க சிந்திக்காதவங்களே இல்ல. "போடா மரமண்டை"ன்னு நாம திட்டுற, நம்மகிட்ட அப்பப்ப  திட்டு  வாங்கிறவங்க கூட,ஏதாவது ஒரு கோணத்தில சிந்திச்சுக் கிட்டுத்தான்  இருப்பாங்க!     

   எந்த கோணம்ங்கிறதுதான் முக்கியம்.அன்பா சிந்திக்கிறோமா,      இல்ல ஆணவமா சிந்திக்கிறோமா,   அமைதியா சிந்திக்கிறோமாஇல்ல ஆக் ரோஷமா சிந்திக்கி றோமா,ரம்யமா சிந்திக்கிறோமாஇல்ல ரவுடித் தனமா சிந்திக்கி றோமா,சுயநலமா சிந்திக்கிறோமா      இல்ல சமதர்மமா சிந்திக்கிறோமா,  அறிவுபூர்வமா சிந்திக்கிறோமா  இல்ல ஆத்மார்த்தமா சிந்திக்கிறோமா,யதார்த்தமா சிந்திக்கிறோமா  இல்ல,எடுத்தோம் கவுத்தோம்னு சிந்திக்கிறோமா,இப்பிடி பல வகையாச் சொல்லலாம்

    பொதுவா நம்ம சிந்தனையச் சுத்தி மூணு விஷயங்கள் எப்போதுமே  'ரவுண்ட்'கட்டிகிட்டே இருக்கும்அதுதான் நாம தினம் தினம் பாக்குறகேக்குற,படிக்கிற,விஷயங்கள்.இந்த'பாக்குற,கேக்குற,படிக்கிற'ன்னு சொல்லுற மூணு விஷயத்திலேயும் சம்பந்தப் படறது,இடம்,பொருள், நபர்ங்கிற மூணு விஷயங்கள்.எந்த இடமா வேன்னா இருக்கலாம்;எந்த பொருளா வேன்னா இருக்கலாம்;எந்த நபரா வேன்னாலும் இருக்கலாம்

    ஆனா,நாம பாக்குற காட்சி ஒவ்வொண்ணும்,நாம கேக்குற சங்கதி  ஒவ்வொண்ணும்,நாம சந்திக்கிற நபர் ஒவ்வொருத்தரும்நம்ம மனச  சீண்டிப் பாக்கும்போதுவத்திக்குச்சி உரசுனா பத்திக்கிற தீ மாதிரி,  நமக்குள்ள  உதயமாகுறது தான் சிந்தனை.நமத்துப்போன தீப்பெட்டி போல நம்ம மனசு இருந்தா,அதுக்கு உரசுர வத்திக்குச்சி பொறுப் பாகாது.நம்ம மனசையும் இதமா,எப்பவும்லேசான சூடோட வச்சுக்கறது ரொம்பவே நல்லது. 

   படிச்சு தெரிஞ்சுக்குற விஷயம் எந்த அளவுக்கு நம்ம சிந்தனையை சீர் செய்யவோ,சிதறடிக்கவோ செய்யு  தோ,அதே அளவுக்கு நாம சந்திக்கிற இடம்,பொருள்,நபர் ஆகிய மூணும் நம்ம மனசுக்குள்ள சிந்து பாடியோ, சிறகடிச்சோ,செதிர் தேங்காய் ஓடச்சோ,நம்ம சிந்தனைகளுக்கு புதுசு புதுசா பாதையமைச்சுபாலமமைச்சு, இமயத்தின் உச்சிக்கோதுருவங்களில் மூலைக்கோ,அல்லது,ஆழத்தின் இறுதிக்கோ,நம்ம  மனச பயணம் போகவைக்கும்அணு அணுவா சிந்தனைகளை  நிமிஷத் துக்கு நிமிஷம் வெடிக்கவெச்சுஅண்டம் முழுசும் அதிரவைக்கும்!

 "சத்தியமா நான் சொல்லுறதெல்லாம் தத்துவம்

 தத்துவமா நான் சொல்லுறதெல்லாம் சத்தியம்"னு

  ஒரு டி.எம்.எஸ் பாட்டுல வர்ற மாதிரி,ஒவ்வொருத்தரும் அவங்க சிந்தனையே உண்ம,ஒசத்தின்னு நெனைக்கிறப்போ,அவங்கவங்க மனசு,ரெக்கை கெட்டி பறக்கும்,

  "தெளிவா தெரிஞ்சா சித்தாந்தம் தெரியாமப் போனா வேதாந்தம்"னு சிந்தனையப்பத்தி கவியரசு சொன்ன மாதிரி,புரியற சிந்தனை,புரியாத சிந்தனைன்னு,ரெண்டு வகையாசொல்லலாம்.

   சிலநேரம் பேச முடியாதவங்க அவங்க சிந்தனையை எழுதி காட்ட றச்ச,புரியாத மாதிரி பேசுற பலபேரு மத்தியிலே,பேசாதவங்க புரிய வைக்கிற சிந்தனை,எவ்வளவோ மேல்னு நெனைக்கத் தோணும்.

  'பேசும் படம்'னு வசனமே இல்லாத பேசாத  கமல் படம் ஒன்னு வந்துச்சே,  அத நாம புரிஞ்சுகிட்டு எவ்வளவோ  சிரிக்கலையா?நல்ல சிந்தனைனா, நச்சுனு மனசுக்குள்ள பூந்து,மனச நய்ய புடைக்கனும்; மனச எட்டு திசையி லேயும் விரிஞ்சு விசாலமா சிந்திக்கவச்சு,வானளாவ பறக்க விட்டு,மாஞ்சா தடவாத பட்டமாசிந்தனையை ஒசத்தனும்.

  கூர்மையான சிந்தனை மனச பொளக்கும்போது மனசின் கிளர்ச்சியிலே அண்டமெல்லாம் அதிரனும்!உண்மையின் உதிரமாசிந்தனை சொட்டு சொட்டாஎல்லார் மனசிலேயும் விழுந்து,மனசு சிலிர்க் கையில,மண்ணெல்லாம் செழிக்கனும்.

   தோகைவிரிச்சாடும் மயில்கள் போல,நல்லதோர் சிந்தனைகள் நலம் வாழ்த்தி,நாலு திசையிலேயும் மேடையிட்டு நர்த்தனமாட, அண்ட மெல்லாம் ச்சும்மா அதிருமில்ல! இதுதான் தெய்வ தரிசனமோ? 

.சந்திரசேகரன் .  

Friday, February 26, 2021

Covid Ridden Conscience

A traitor to the conscience,Truth is,

Tracking falsehood as its shadow,

Or walking with it on a parallel lane, 

Violating the vital norms of qualms.


Truth shamelessly wears the world's 

Most gorgeous costumes and cosmetics,

Smuggled by falsehood,for a fashion parade,

At the avenues of Justice and jurisprudence.


Conscience is under the constant grip of 

A Jekyll and Hyde game,almost everywhere.


Tainted truth,eats away the qualms of  conscience,

Like the fence fiendishly grazing the green field;

Like the cattle that starve for their daily fodder,

Justice too starves for its balance and neutrality.


When conscience is crudely constrained to be

The rubber stamp of the rotten layers of truth,

Blinded justice beckons a bunch of errors,

To voice its verdicts,with choking blunders.


Only if Truth buries falsehood,placing on it a wreath, 

Covid ridden conscience will have fresh air to breathe.

P.Chandrasekaran.

Friday, February 19, 2021

மவுசு

மரமேறும் மனசுக்கு, 

கிளையெல்லாம் மவுசு; 

கிளைதவறி விழும்போது, 

மண்ணொன்றே மவுசு. 

அழகொன்றே  மவுசுன்னா, 

ஆற்றலெல்லாம் தரிசு;

தொழக்கூடும்  தெய்வத்தையும் 

துரத்தும் பொய்த்தவசு.  

பணம்தடித்துப் பெருகையிலே  ,

படைபலமே மவுசு; 

பாசத்தை பாடைகட்ட 

பரலோகம் பரிசு. 

ஊழல் பெரும் மவுசாக,  

உல்லாசம் சொகுசு. 

பாழடைஞ்ச நேர்மையினை 

பாரமென பறைசாற்றி, 

பத்தமடைப் பாயினிலே, 

பக்குவமாய் வீசு. 

தொற்றுநோய் தொடர்ந்துவர, 

தடுப்பூசிக்கு மவுசு. 

கற்றெடுத்த மருந்துக்கு 

'டெஸ்ட்' செய்ய, 

கிட்டும் உடல் மவுசு. 

குற்றத்தின் மவுசினிலே, 

மனசுக்கில்லை கூசு; 

பற்றற துறவிக்கோ, 

மவுசெல்லாம் தூசு! 

                        ப.சந்திரசேகரன் . 

Saturday, February 13, 2021

The Ocean of Love

 {HAPPY VALENTINE'S  DAY}

Love steals into our mind

Like water into the coconut.

Love springs from our heart,

Like water roaming from a rock.

Love is a hidden treasure house 

Brimming with joy and peace.

Unfailing love is like the unmixed smile

Of a newborn baby,as nectar from a sieve.

Eyes meet,foreboding love between hearts.

Strangers meet to become friends of faith.

Wherever there are helping hands,

Valleys rise up to the height of hills.

Rolling tears recede like the ebbing waves,

As generous love grows into a large ocean.

P.Chandrasekaran.



Monday, February 8, 2021

ஊமைவிழிப் போராட்டம்!

திரிசங்கு நிலைத்தந்து 

தேர்தல் முடிந்தபின்னே, 

அரசமைக்க ஆள் பிடித்தால், 

ஆளுயர மாலையிங்கே! 

முரசுகொட்டும் முடிச்சவிர்ப்பில் 

முழுக்க நனைந்தோர்க்கு, 

முக்காடு தேவையில்லை. 


தரிசாகக் கிடந்த நிலம் 

வேர்வை நீர் தெளித்து 

வெள்ளாமை ஆகிவிட, 

அரிசியும் ஆமக்கும்

அளவின்றி குவித்துவைக்க,  

வரிசையை இடைமறித்து 

வணிகப்பேய் வாரிச் செல்லும். 


பெரிசாய் வளர்ந்தோரே 

பேரத்தை வென்றெடுத்து,

அரசியல் புரிவோருக்கு 

ஆதார நிதியாவர். 

நெரிசலில் நலிந்தோர்க்கு, 

நடுத்தெருவில் நகர்வலமாம்! 


சிரசெல்லாம் கொதித்தாலும் 

சிதையாகிப் போனாலும், 

கரிசனம் காணாது 

காலம் கடந்திடுமே, 

உரசிடும் உழுதமண்ணின்,  

ஊமைவிழிப் போராட்டம்! 

ப.சந்திரசேகரன் .   

Thursday, February 4, 2021

Travel Traits

If a space to live in peace,is the best that we need,

A space to travel shall not be the choice of greed.

Our GPS might show many a zone for our reach.

But our aim should be,to travel without a breach.


The body passes from place to place with its wield.

But the mind calmly controls the body as a shield.

If the body has its full  length and breadth to grow,

The mind's travel mode is to delve deep with a glow. 


Wherever the body goes,the mind is made up to toe

Like a torch showing all the hurdles,away to throw.

The globe is the gospel for us,to explore and learn

Toying with the travel traits,sensible and stubborn.


Travel is a benefactor of life's large and lofty goals,

Tracking us all on a razor's edge,on Time's paroles.

P.Chandrasekaran.