நாக்கின் நமைச்சலில் நழுவிடும் சொற்கள்,
தீக்கிரை யாக்குமாம்,தேன்கூட் டுறவை.
பாக்கள் பலவும் புனைவோர் அவையிலும்,
வாக்கினில் பிறழ்வர்,ஒட்டக் கூத்தனாய்.
தாக்கிடும் கொம்புடை,குறும்புக் காளையை,
பூக்களின் நாரென புதுமணம் பரப்பியே
மூக்கணாங் கயிறெனும் திருமணக் கூடலில்,
சீக்கிரம் இழைவது சேவலோ,கோழியோ?
போக்குகள் மாறிடும் புதுவழிச் சாலையில்,