Wednesday, February 25, 2026

செங்கொடிச் சிற்பி.



{அஞ்சலிமட்டும் போதாது;
ஆயுள் முழுமையும் வணங்கி
நெஞ்சில் நிறுத்துவோம்!}
 
 "தனக்கென்ன முயலா நோன்தாள்"எனுமோர்

பிறர்க்கென வாழ்ந்ததோர் பிறவியின் பெருமை, 

நிறைகுடம் ஆகிட நிலமெல்லாம் நெகிழும்; 

நல்லக்கண்ணு எனுமோர் பெயரே நல்லதாம்!

 

நன்மையின் எல்லைக்குள் நாளும் வாழ்ந்து, 

மென்மையாய் மனிதருள் மெய்யோடு கலந்து, 

மேன்மையை புகட்டிய மாசிலா மனிதராம்;

உண்மையின் குரலாய்,உணர்வின் புனிதராம்!

 

அரசியல், பாசறையின்  ஆயிரம் கரங்கள்

உரசிடும் வண்ணம்  ஊர்வலம் காட்டும்

பரிசெனப் பதவியும்,பணத்தின் போர்வையும், 

சிரசினைத் தாக்கி சிறுமைகள் கூட்டும்.


தரிசுகள் இல்லா நிலத்தினை போன்றொரு, 

நெரிசல் விலக்கி நேர்மையின் நகலினை,   

முரசுகள் முழங்கிட செங்கொடி தாங்கி, 

அரசுடன் இணைந்து அஞ்சலி செலுத்துவோம்! 

ப சந்திரசேகரன்.     

Friday, February 20, 2026

கிழவனும் கிழவியும்

கிழவன்  மறப்பான், 

கிழமைகள் தனையே. 

கிழவி அறிவளோ,

கிழவன் நிலைமை. 

கழுவிடும் மீன்களில்

நழுவிடும் மீன்களென,

வழுக்கிடும் கிழமைகள்.

விழித்திரும் வேளையில்.

கழிந்த காலத்தின் 

கிழமைகள் தனிலே ,

கொழித்தவை எவையோ,

கழித்தவை எவையோ! 

கழித்ததும் குழித்ததும்

அழிந்து போகுமோ 

அழியா மனதில் !

வழித்தடம் பலவாம், 

வாழ்வின் வீதியில்.

விழுமியம் வழுவா

பழுதிலா படிப்பினில்,

இழித்ததும் இல்லை; 

பழித்ததும் இல்லை;  

செழித்து வாழ்தலும் 

ஒழித்து வாழ்தலும்  

சுழித்ததோர் விதியோ

சூழ்நிலைக் கதியோ!

விழித்து விறைந்து

உழைத்த கிழமைகள்,

கிழவனும் அறிவான்; 

கிழத்தியும் அறிவாள்.

கிழமைகள் மறப்பினும்,

பழமைகள் மாயுமோ?

முழுமையே முதுமை.       

ப.சந்திரசேகரன்.


  

Friday, February 13, 2026

HAPPY VALENTINE'S DAY!


                          14th Feb.2026

When the birds fly, forming a line,

Our hearts take their wings to fly.

That is Love.

Seeing flowers blossom in multi colors,

The colours of mankind cling together.

That is Love.

In maternity wards, the cries of the newborn

Create a cocktail of different blood groups.

That is love.

Hand in hand, mind to mind, there is vibration,

Tickling through the body,and trending the mind.

That is Love.

Be it blood relations, or friendship of fine forms,

The veins of valentine, transfuse the Love norms.

                    HAPPY VALENTINE'S DAY !

P.Chandrasekaran.

Monday, February 2, 2026

Breaking Points

 

                                    

In the midst of life's laudable breakthroughs, 

Booming breakdowns keep threading, threats.

Things break away, backtracking the progress.

Many hearts break down, at the sight of break ups.

Mind's magnitude melts, hitting the breaking point

As Tennyson concludes his 'Break Break Break,'

"The tender grace of a day that is dead,

Will never come back to" any of us, in the world.

                              

The lives of many are dumped as 'heaps of broken images'

When love and faith break, time loses its trending charm.

'The best is yet to be', implies waiting for a breakthrough.

Breaking symptoms stoutly strike as flashes of failure alerts.  

Each break down looks forward to beaming breakthroughs.

Each breaking point boosts the broken minds, to turn spruce.

 P, Chandrasekaran.