இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
சக்தியில் பொங்கி சரித்திரம் படைப்போம்;
பக்தியில் பொங்கி பரவசம் பரப்புவோம்.
மதப்பகை எரித்து மனிதம் பொங்குவோம்.
மதிப்புறும் மானுட,மேன்மைகள் மீட்போம்;
பொய்மை தகர்த்து புன்னகை பொங்குவோம்
மெய்வழி மாண்புகள் மேவித் திரட்டுவோம்;
அருவடை செய்வதை அறப்பணி ஆக்குவோம்.
அரும்பும் அறிவினில்,ஆற்றல் பொங்குவோம்.
பலவுள் தெளிந்து பிறையென வளர்வோம்.
அலகுகள் குறித்து அதிசியம் பொங்குவோம்!
நிலமகள் செழித்திட நீர்நிலை காப்போம்,
நலிவுறா உழைப்பின் நற்பலன் நிறைப்போம்.
குலமதன் குணங்கள் குவித்துப். பொங்குவோம்
மலையென மகிழ்ச்சி மகசூல் பொங்குவோம்.
ப.சந்திரசேகரன்.

நன்று.
ReplyDelete