கிணற்றுத் தவளைக்கு கிணறே பிரதானம்;
கிழக்கும் மேற்கும் பழக்கம் இல்லை.
பிணத்திற் காவது பிரிவின் சமாதானம்;
விழும் மாலைகள் வாழ்வோர் எல்லை.
கணக்குகள் பார்க்கையில் தேவை நிதானம்;
பிழைகள் ஏற்படின் பிறந்திடும் தொல்லை.
மணக்கும் மாலைகள் மலர்களின் தானம்;
மழித்தலும் நீட்டலும் இளித்திடும் பல்லை.
பிணக்கிற்கு மருந்து பிடித்ததோர் மௌனம்;
பழிக்கத் தொடங்கிடின் வீசுவர் கல்லை.
இணக்கம் தாழ்ந்திடின் எதிர்ப்படும் ஈனம்;
இழிவை மறுத்திடும் மனமொரு முல்லை
துணிச்சலாய் வாழ்ந்திட தூவிடும் வானம்
தொழிலைத் தொழுதிட திக்கெட்டும் தில்லை.
ப.சந்திரசேகரன்.
"......விழும் மாலைகள் வாழ்வோர் எல்லை.....???"
ReplyDelete