இனிய ஆசிரியர்தின வாழ்த்துக்கள்.
பிரம்பைத் தவிர்த்து
வரம்பை விதித்த
வகுப்புகள் கண்டு,
அறம்பல ஆற்றி
பள்ளிகள் போற்றும்
ஆசிரியர் தமக்கும்,
உயர்கல்வி உயர
அயராது உழைத்து
பல்கலைக் கழக
மாண்புகள் காக்கும்
ஆசிரியர் தமக்கும்,
ஓய்வினில் இருக்கும்
அக்கால ஆசிரியரின்
இக்கால வாழ்த்துக்கள்.
கடமைகள் ஆற்றி
உரிமைகள் காத்து
உயர்வுற்று வாழ்வீர்.
ப.சந்தியசேகரன்.
No comments:
Post a Comment