இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
---------------------------------------------------------------------
பழையன எரித்தல்,அல்லவே போகி!
அழிப்பன அழித்தது,போகியென் றாகி,
வழித்தடம் வரையுமாம்,வலிகள் விலக்கி!
பொங்கலின் கோலம்,புத்தொளிப் பூரணம் .
மஞ்சள்,கரும்பு,மாவிலைத் தோரணம்,
நெஞ்சின் நிறைவிற்கு,காட்டும் காரணம்.
பசுத்தோல் போர்த்திய புலிகள் இருக்க,
பசப்புகள் இல்லா மாடுகள் எல்லாம்,
ருசிக்கும் பொங்கலில்,ரசனை யுறுமாம்.
வள்ளுவன் வழியில் வாழ்வோர் தமக்கு,
உள்ளம் பொங்குதல்,உண்மைக் கூற்றே!
ஒருவரை ஒருவர் ஊர்வழிக் காணுதல்,
மருவிடா அன்பின் மனம்நிறை ஊற்றே!
நல்லவை பொங்குவோம்,நாட்பட எங்கும்.
சொல்லும் செயலும் சுகம்பல பொங்கிட,
செல்லும் வழிதனில் சிகரம் கூட்டுவோம்.
ப.சந்திரசேகரன்.
No words to reveal 💫
ReplyDelete